
எழில் உலகம் இங்கு படைக்க
எழுச்சிகள் பல இங்கு பெற
மனதின் நெருப்பு எடுத்து
எரிதழல் எடுத்து வா.............
விதிகள் இங்கு விடுத்து
மதிகளின் எல்லைகள் தேடி
கொடுமைகள் கண்டுசெங்குருதி கொதிக்க
எரிமலையாய் வெடித்து வா..........
திசைகள் பல தேடி
தினவெடுத்த தோள்கள் கொண்டு
திமிர் வாள் எடுத்து
வெற்றியின் விசைகள் பல செய்து
புயல் காற்றாய் மாறி வா.............
தடைகள் பல எதிர்த்து
தளைகள் இங்கு உடைத்து
மன வாள் எடுத்து
மடைகள் இங்கு திறந்து
புது வெள்ளமாய் சீறி வா.....
சிதைகள் சில மூட்டி
நெருப்பு துளிகள் சில எடுத்து
சிறகுகள் இங்கு பொருத்தி
விடியலை தேட
விரைவாய் ஓடி வா..........
வாழ்வதும் ஒருமுறை........
மண்ணில் சாய்வதும் ஒருமுறை........
புது உலகம் படைக்க
பலர் இதயம் திறக்க
மன நெருப்பு எடுத்து
எரிதழல் எடுத்து வா...........
இர. குமார்.
No comments:
Post a Comment